Thursday, October 24, 2013

மூட்டு வீக்கத்தை குணப்படுத்த சில வழிகள்?

முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட்டால் மூட்டு வீக்கம் குறைவதுடன் மூட்டு வலியும் குறைவடைவதுடன் மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோயும் குணமாகும்.

வாயு தொல்லை நீங்க?

முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும்.

மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி ஆகிய பிரச்னைகளும் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க?

முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம் ஆகும்.

நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும் இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக் கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில் கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்சி காலை, மாலையில் 250 மிலி வீதம் சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

முழங்கால் வாதம் ?

ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும் இப்படியிருந்தால் முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள் அப்படியானவர்கள் வாரம் இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும் முழங்காலில் வாத நீர் தங்காது காலில் தொந்தரவும் இருக்காது.

எனவே எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளுக்குவலி குறையும் அதே போல் அத்தி காயை நன்கு அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com