தமிழ் சீ.என்என் இணையத்தின் கண்ணன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். திவய்ன விசனம்.
தமிழ் சீஎன்என் இணையத்தின் உரிமையாளர் என அறியப்படுகின்ற கண்ணன் என்பவர் நாட்டினுள் நுழைந்திருந்ததும் அவரது வருகை தொடர்பாக தொடர்சியாக ஊடகங்கள் சந்தேகங்களை வெளியிட்டிருந்ததும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் திவய்னவின் வாராந்த பாதுகாப்பு பத்தியில் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் தொடர்பான விசாரணைகளை பாதுகாப்பு பிரிவினர் முடுக்கி விட்டிருந்த தருணத்தில் பாதுகாப்பு அமைச்சினுள் நட்புக்குரியவர் என்ற போர்வையில் நுழைந்துள்ள ஒருவர் அவர் பாதுகாப்பாக வெளியேற உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவய்னவின் செய்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சீ.என்.என். எனப்படும் புலிகளின் இணையத்தளத்தை நடாத்தும் கண்ணன் அல்லது செல்வன் என அழைக்கப்படுபவர் இந் நாட்டுக்கு வந்திருந்தார். அவர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு கலந்து கொண்டதுடன் , கண்ணனுக்காக முன் ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ் சீ.என்.என். கண்ணன் அங்கே முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியிருந்தோம். அதன்பின்னர் கண்ணனை இந்நாட்டுக்கு யார் அழைத்தது என்பதை புலனாய்வுத் துறை தேடியது. இச் சமயத்தில் கண்ணன் எனபடும் செல்வன் எமது பத்திரிகை காரியாலயத்தை இருமுறை தொடர்பு கொண்டார். " நான் ஒரு பணக்கார வியாபாரி. என்னால் உங்கள் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்" என்று அதட்டும் பாணியில் தொலைபேசி வழி பேசினார்.
கண்ணன் இப்படி அதட்டல் தொனியில் பேசும்போது எம்மிடம் அவர் குறித்த தகவல்கள் இருந்தன.
ஆனாலும் கண்ணன் திருட்டுத் தனமாக நாட்டை விட்டு வெளியேறி விட்டார் எனத் தெரிய வந்தது. அவரை கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு பாதுகாப்பு துறைக்குள் புகுந்து கொண்டுள்ள ஒருவரே பாதுகாப்போடு அழைத்துச் சென்றுள்ளார். இதிலிருந்து வன்னி போரின் போது இல்லாதவர்கள் நட்பு முகத்தோடு உட்புகுந்து கேடுகளை விளைவிக்க முனைவதை உணரமுடிகிறது.
2 comments :
I am too sure LTTE trying to change Mahinda regime and then start again their Tamil Ealam war, they are trying to use some persons from Mahinda regime as the Premadasa time in year 1989 - 1991 , if LTTE too weak they use this tricks always , i know my self already many LTTEs connected wih goverment and do too sectret active their get their destinations.
ஆர்யா அவர்களே,
இவ்வாறான தீய நோக்கங்களுடன் உள்ளவர்கள் யார் என்பதை நாட்டின் நன்மை கருதி வெளிச்சத்திற்கு கொண்டுவராலாம் அல்லவா..
Post a Comment