Monday, October 28, 2013

அநாதையாகும் ஆனந்தசங்கரி! ஆயரிடம் மன்றாட்டம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னைக் கைவிட்டு விட்டது, தனக்கு குழிபறிக்கின்றது. மன்னார் ஆயர் தலையிட வேண்டும் கடிதமூலம் கேட்டுள்ளார் முன்னாள் கிளிசொச்சி பா.ம.உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமாகிய ஆனந்த சங்கரி. ஓராண்டுக்கு முன்னரிருந்தே தன்னை அரசியல் அரங்கில் இருந்து அகற்றிவிட வெளிநாடுகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறைபடுகின்றார். உணமைதான், வெளிநாடுகளில் மட்டும் அல்ல, அவரதுசொந்த கிளிநொச்சி மாவட்டத்திலேயே அவரை அரசியல் அரங்கில் இருந்து அகற்றி விட்டார்கள்.

வெளிநாடுகளில் அகற்றிவிட முயற்சிப்பதை அறிந்த ஆனந்த சங்கரியார், அவரது மாவட்டமே அவரை அகற்றி விட்டதை உணராது இருப்பது புதுமையாக இருக்கின்றது.

தமிழரின் மிகப் பலம் வாய்ந்த அமைப்பான தமிழர் விடுலைக் கூட்டணி தன்னால்தான் இப்படி முகவரியற்றுப் போய்விட்டது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாவதற்கே தான்தான் காரணம் என்பதையெல்லாம் சங்கரியார் மறந்துவிடக் கூடாது. முற்பகல் செய்யின் .....

உண்மையான ஜனநாயகவாதி மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டும். காமராஜர் போன்ற தலைவர்கள் இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருப்பதற்கு அவர்கள் மக்கள் தீர்ப்பை மதித்ததுதான் காரணம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உண்மையில் குழி பறிக்கின்ற அமைப்புதான். ஆனால், அது எவ்வளவுதான் குழிபறித்தாலும் கிளிநொச்சி மக்கள் அவரை விரும்பி இருந்தால் அவருக்கு நிறைய விருப்பு வாக்கு அளித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்பவில்லை. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செய்யாது அதிலும் இதிலும் குறை காண்பது, கிளிநொச்சி மக்களை கொச்சைப் படுத்தும் செயலாகும்.

உண்மையில் ஆனந்த சங்கரியார் கிளிநொச்சி மக்களிடம்தான் முறையிட்டிருக்க வேண்டும் மன்னார் ஆயரிடம் அல்ல. மன்னார் ஆயர் யார் என்ற கேள்வியை நாம் சங்கரியாரிடம் முன்வைக்கின்றோம். அவர் ஒரு துறவி. அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அரசியலினுள் நுழைகின்றார்கள் என்றால் அவர்களை அந்த முயற்சியிலிருந்து ஓதுக்கவேண்டிய அரசியல்வாதிகள் அவர்களை முன்வரிசைக்கு கொண்டுவருவது கையாலாகாத்தனமாகும். அமைதிதேடி , இறையருள் தேடி செல்லும் மக்களிடம் மத குருக்கள் (எந்த மதமாக இருந்தாலும்) அரசியல் திணிப்புச் செய்வது அல்லது தங்களது அரசியல் விருப்பை வற்புறுத்துவது ஏற்கத்தக்க ஒன்றல்ல.

வயது போய்விட்டது. தொகுதி மக்களும் கைவிட்டு விட்டார்கள். சமாதானப் பணிக்காக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பணத்தோடு ஓய்வெடுக்க வேண்டியதுதானே.


2 comments :

Arya ,  October 29, 2013 at 2:27 PM  

சேரா இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..., when you had joined to TNA that time you had lost your honest and respect.

Anonymous ,  October 29, 2013 at 4:41 PM  

This was happened to many leading
politicians.The past poltical history reveals,as you know it is hard to challenge the trickyones.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com