Tuesday, October 29, 2013

வடக்கிற்கு இன்னும் சிங்களவர்கள் வேண்டாம் என்கிறார் விக்கி! விக்கி புதிய ஈழத்தை உருவாக்கவே இனவாதம் கதைக்கிறார்! - தேசகிதைசி தேசிய அமைப்பு

சென்ற 25 ஆம் திகதி வட மாகாண சபையின் ஆரம்ப அமர்வில் முதலமைச்சர் விக்னேஷ்வரன், சிங்கள் மக்களை வடக்கில் குடியமர்த்தக் கூடாது எனக் கூறிய கூற்றை வன்மையாக்க் கண்டிப்பதாக “தேசகிதைசி தேசிய அமைப்பு“ குறிப்பிடுகின்றது.

இதுதொடர்பில் அதன் தலைவர் கலாநிதி அமரசேக்கரவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிவித்தலில்,

“சென்ற 25 ஆம் திகதி வட மாகாண சபையின் ஆரம்ப அமர்வில் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தேசிய ஒற்றுமைக்கு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவற்றில் சிங்கள மக்களை வடக்கில் குடியமர்த்தக் கூடாது என்ற மிகவும் பாரதூரமான இனவாதக் கருத்தொன்றையும் முன்வைத்திருக்கின்றார். அதனை நாங்கள் வன்மையாக்க் கண்டிக்கின்றோம். அதன்மூலம் அவர் சென்ற சில நாட்களில் கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்களையும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றார். விக்னேஷ்வரன் இனவாத சிந்தனையோடு இருப்பதைப் போல, இனவாத சிந்தனையுடனான சிங்களத் தலைவர் ஒருவர் தமிழ் மக்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழ இடமளிக்கமாட்டோம் என்று கூறினால் அதற்கு முழுமையாகப் பொறுப்புச் சொல்ல வேண்டியது விக்னேஷ்வரனே.

கொழும்பில் குடியேறி, கல்வி கற்று, நீதிச் சேவையின் உயரிய பதவியைப் பெற்று வரப்பிரசாதங்களுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்த அவர், இன்று அவர் பேசுகின்ற பேச்சுக்கள் இனவாத்த்தைக் கட்டியெழுப்புகின்றமை நன்கு தெளிவாகின்றது. ஒருபுறம் தமிழ் மக்களுக்காக மட்டும் விசேட உரிமைகள் பற்றி ஒப்பந்தங்கள் ஏதுமின்றி கதைக்கின்ற அவர், மறுபுறம் அனைத்து இனங்களும் தங்களது அடிப்படை உரிமையான விரும்பிய இடத்தில் குடியேறுவதற்கான உரிமைக்கு முடிச்சுபோடுவது நகைகக்கத்தக்க விடயமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

எதுஎவ்வாறாயினும் பொலிஸ் - காணி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதும் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவது முதலான அவரின் பிற தேவைப்பாடுகள் பற்றிப் பார்க்கும்போது, வடக்கிலிருந்து சிங்களவர்களை விரட்டியடிப்பதற்கான ஒப்பந்தம் புதிய ஈழத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஒரு அங்கம் என்பது பற்றி அரசாங்கத்திற்கு நாங்கள் அபாய எச்சரிக்கை விடுக்கிறோம்“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  October 29, 2013 at 11:27 AM  

Ring masters are behind the scene

Anonymous ,  October 29, 2013 at 4:45 PM  

Friendly terms may bring a good atmosphere and prosperity.Racial hatred to be thrown into the deep sea

arya ,  October 30, 2013 at 4:57 PM  

இப்ப ஒரு நல்ல சந்தர்ப்பம் கொழும்பில் இருந்து நாடோடி தமிழ் கூட்டங்களை அகற்றுவதற்கு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com