Wednesday, September 18, 2013

அமெரிக்க அழகியாக இந்திய பெண்!

அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டிற்கான அழகிப் போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லான்டிக் நகரில் நடந்தது. அதில் மொத்தம் 53 அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களில் அமெரிக்க அழகியாக நினா தாவ்லூரி தேர்ந்தெடுக்கப் பட்டார். 24 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை அமெரிக்காவில் மகப்பேற்று டொக்டராக பணி புரிகிறார்.

அமெரிக்கர் அல்லாத, பொன்னிற கூந்தல் இல்லாத நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணி யாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை. அவர் குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன. அவற்றில் சிலர் இவரை அரேபியர் என்றும் கூறியுள்ளனர். இவரை அமெரிக்கர் என ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இவர் அழகியாக தேர்வு பெற்றதை நம்ப முடியவில்லை என்றும் கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com