Wednesday, September 18, 2013

எல்.ரி.ரி.ஈ யை அழித்த எமக்கு த.தே.கூ ஒடுக்குவது பெரியவிடயம் இல்லை!

எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனால் சாதிக்க முடியாமல் போணதை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல் கிறது எனவும் புலிகளை தோற்கடித்த எமது அரசாங்கத் திற்கு இதனை ஒடுக்குவது பெரிய விடயமல்ல என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அந்தக் கட்சி ஏன் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. அரசியல் தீர்வொன்று எட்டப்படுவதை அது விரும்பவில்லை என்று கூறிய அமைச்சர் பிரிவினைவாத த்தை ஏற்படுத்த முயலும் த.தே.கூ. தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆயுதம் தூக்க வேண்டியும் வரலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் செயற்பட வேண்டி வரும் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் என புலிகளின் கருத்துக்களை த.தே.கூ. நிறைவேற்ற முயல்கிறது.

வடமாகாண சபையின் அதிகாரத்தை எமக்கு வழங்கினால் வடக்கை மேலும் பலப்படுத்துவோம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே வடக்கில் தேர்தல் நடத்தப்படுகிறது. யாருக்கும் இதில் வெற்றியீட்ட முடியும்.

மீண்டும் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்க முடியாது நாட்டின் சட்டத்திற்கும் யாப்பிற்கும் மாற்றமாக யாராவது செயற்பட்டால் அதற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க பின் நிற்காது அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் செயற்படும். தேர்தல் காலத்தில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்தால் சர்வதேச சமூகத்திற்கு தவறான தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com