Sunday, September 15, 2013

‘சீதா மங் ஆவா’ (சீதா.. நான் வந்துவிட்டேன்) திரைப்படத்திற்கு எதிராக ராவண சக்தி யுத்தப் பிரகடனம்....?

பிரபல சிங்கள திரைப்பட இயக்குநரான ஜயசேக்கர ஆபொன்சுவின் ‘சீதா மங் ஆவா’ திரைப்படம் தொடர்பிலான முதல் திரைக்காட்சியுடன் கூடிய விழா பொராலை ‘ரீட்ஸ்’ சினிமா திரையரங்கில் நேற்று (14) இடம்பெற்றது. அவ்வேளை அங்கு எதிர்பாராத வண்ணம் உள்நுழைந்த ராவண சக்தி உறுப்பினர்கள் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர்.

ராம – ராவண – சீதா எனும் மூன்று பெயர்களையும் நீக்காமல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடமளிக்க மாட்டோம் என ராவண பலய உறுதியாக நின்றுள்ளது. இதனைக் கருத்திற் கொள்ளாது திரைப்படத்தை வெளியிடுவதாயின் அதற்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்யுமாறு மேலும் கோரியுள்ளது.

‘சீதா மங் ஆவா’ திரைபடம் திரையிடப்படும் போது, அதனைப் பார்ப்பதற்காக வருகை தந்திருந்த ராவண சக்தி அமைப்பைச் சேர்ந்த 17 பேர் ஆசனத்திலிருந்து எழுந்து பின்னர் அமர்ந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைத்த ராவண சக்தியின் பொதுச் செயலாளர் இத்தெகந்தெ சத்தாதிஸ்ஸ தேர்ர், குறிப்பிடுகையில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மன்னன் (இ)ராவணன், இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவன். அம்மன்னனை பெரும் இழிவினை வரவழைப்பதாக இந்தப் படம் அமைந்துள்ளது. வெகு விரைவில் இதற்கு எதிராக சட்ட ரீதியான முடிவுகள் முன்னெடுக்கப்படும். இந்த வீரதீர அரசனின் வாழ்வில் சேறு பூச யாருக்கும் இடமளிக்க முடியாது.

இது தொடர்பில் பொராலை ரீட்ஸ் சினிமாத் திரையரங்கின் பணிப்பாளர் மார்டின் விக்கிரமரத்ன கருத்துரைக்கும் போது கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நான் 32 ஆண்டுகளாக சினிமா கூட்டுத்தாபனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். ஆயினும், இவ்வாறான சிறந்ததொரு படத்தைக் கண்டு களிக்கவில்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக உட்கார்ந்த எவரும் தனது ஆசனத்தை விட்டும் எழுந்து செல்ல மாட்டார். இதில் வரும் அனைத்துக் காட்சிகளும் மகிழ்வையே தருகின்றன. அதனால் இந்த்த் திரைபடம் எவரினதும் மனதை நோவினை செய்யாது. இதன் மூலம் பௌத்த பிக்குமாருக்கும், இராவண மன்னனுக்கும் கௌரவமே அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பொராலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்த்த் திரைப்படம் திரையிடப்படாமல் இருக்க ஆவன செய்யுமாறும், பதாகைகளை அகற்றுமாறும் என்னிடம் குறிப்பிட்டார். அவ்வாறு அவர் குறிப்பிடுவதற்குக் காரணம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலும், ராவண சக்தியின் முறைப்பாடுமேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதனால் பதாகைகளையும், விளம்பரங்களையும் நிறுத்தி வைக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த திரைப்படத் தயாரிப்பாளர் சமிந்த ரணசிங்க குறிப்பிடுகையில், கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நான் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகையை இந்தத் திரைப்படத்திற்காக செலவு செய்துள்ளேன். கடன் பட்டே இந்தப் படத்தை தயாரித்தேன். இவ்வாறு நான் செய்ததற்கான காரணம் (இ)ராவண மன்ன்னினதும் பௌத்த மத்த்தினதும் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கே’

நான் பல்லாயிரம் கஷ்டங்களுக்கு மத்தியில் தயாரித்த இந்தத் திரைப்படத்தை திரையிடுவதற்கு ராவண சக்தி எனக்கு இடமளிக்காதவிடத்து, நான் ராவண சக்தியினரின் முன்னிலையில் சென்று தீயிட்டு என்னைக் கொழுத்திக் கொள்வேன். அழிந்து செல்லும் எங்கள் கலாசாரத்தை மீட்டெடுப்பதற்கே நான் முயன்றேன்... புதிய தலைமுறையினருக்கு அதுபற்றித் தெளிவுறுத்தவே படத்தை தயாரித்தேன்...

அதேபோல நான் ஒரு சிறந்த பௌத்தன். பௌத்த மதத்தில் உள்ளடங்கும் அனைத்து விடயங்களையும் வெளிக்காட்டியே நான் இதனைத் தயாரித்துள்ளேன்.

இந்தப் படத்திற்காக சினிமாக் கூட்டுத்தாபனம் தனது அநுமதி வழங்கியுள்ளது. அவ்வாறிருந்தும் ராவண சக்தி இதுதொடர்பில் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கின்றது.

அப்பாவிக் கலைஞர்களாக நின்று படத்தைத் தயாரிக்கும் போது, அதனைத் அழித்தொழிப்பதற்காக முயற்சி செய்பவர்கள் பற்றி மிகவும் கவலையாக இருக்கின்றது. தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.

திரைக்கதை, வசனம், மற்றும் திரைப்பட இயக்கம் என்பவற்றைச் செய்துள்ள ஜயசேக்கர அபொன்சு இதுபற்றிக் கருத்துரைக்கும் போது கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் மன்ன்ன் இராவணனுக்கு எவ்வித இழுக்கும் ஏற்படுவதில்லை. இராவண மன்னனின் அதீத சக்தியைக் வெளிக்கொணரும் வண்ணமே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் இராவண மன்னன் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள பெளத்த பிக்குகள் வழிகாட்டுகின்றனர்.

படத்தில், மன்னன் இராவணனின் தேகம் கல்வீடொன்றில் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் அவரின் பலமும், புகழும் தியானத்தின் மூலமே உயிர்ப்பிக்கப்படும் என்பதை பௌத்த பிக்குகளே எடுத்துரைக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் எவரும் இழிவு செய்யப்படவில்லை. எங்களுக்குத் தேவையானது என்னவென்றால் எங்கள் சினிமாத் தொழிலின் மூலம் எங்கள் கதையை எங்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டுவது மட்டுமேயாகும்.

(நன்றி: தினமின, தமிழில்: கலைமகன் பைரூஸ் )

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com