Sunday, September 15, 2013

அன்று எமது வீரராக பிரபாகரன் திகழ்ந்தார் எனினும், ஜனாதிபதி ஒரு உறுதியான தலைவர் என்பதை, நாம் இன்று புரிந்து கொண்டோம்!

நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு, ஜனாதிபதிக்கு முழு அளவிலான ஆதரவை வழங்குவோம் எனவும், அன்று எமது வீரராக பிரபாகரன் திகழ்ந்தார். எனினும், ஜனாதிபதி ஒரு திடமான உறுதியை கொண்ட தலைவர் என்பதை, நாம் இன்று புரிந்து கொண்டோம் என, முன்னாள் எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தர்கள், ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொது மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தின்போது, இவர்கள் ஜனாதிபதியை சந்தித்து இணைந்து கொண்டபோதே, இவ்வாறு தெரிவித்தனர்.

பிரபாகரனை தாம் ஒரு வீரராக நினைத்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உண்மையான ஒரு வீரர் என்பதை, நாம் இன்று தெளிவாக புரிந்து கொண்டதாக, ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முக்கியஸ்தர்களாக செயற்பட்ட டி.தேவராஜன், பீ. ரகுநந்தன், பீ.ஏ. நியூட்டன், கே.ஏ. தவராசா, எம்.பீ. சுதர்சன, பீ. யோகேஸ்வரன், கே. யோகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியை சந்தித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டிசுட்டான் அமைப்பாளர் திருநாவுக்கரசு ராகேஸ், அதன் அங்கத்தவர் ரணராஜன் தில்லை நடராஜா ஆகியோரும் ஜனாதிபதியை சந்தித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com