Sunday, September 15, 2013

இந்தியாவின் மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றாதவிடத்து, இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்!

நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர், இந்திய அரசின் மூன்று நிபந்தனை களையும் நிறைவேற்றினால் மட்டுமே கலந்துகொள்வார் என புதுதில்லி இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இந்த நிபந்தனைகளில் முக்கிய நிபந்தனையாக இருப்பது, இந்து - இலங்கை ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகார ங்களை இல்லாதொழிக்காமலிருப்பதாகும்.

இலங்கைக்குச் சொந்தமான வட கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்பில் இலகுவான சட்டமொன்றை ஏற்படுத்துவதும், சாம்பூர் அனல் மின் நிலையத்துடன் தொடர்புடைய ஒப்பந்தத்திற்கு வெகுவிரைவில் கைச்சாத்திடும் இரண்டுமாகும்.

சாம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் கைச்சாத்திடுவது பல ஆண்டுகளாக தாமதமாக இருப்பதும், வட காடலில் மீன் பிடிக்கும் போது கைது செய்யப்படுகின்ற தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வது தொடர்பாகவும் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்குமிடையே இராஜ தந்திர பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன. 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான இருநாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஸல்மன் குர்ஷித் இம்மாத இறுதியில் கொழும்புக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையின் பெறுபேற்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவிப்பார்.

இந்த அறிக்கையை அலசியபின்னரே இந்தியப் பிரதமர் கொழும்புக்கு வருவது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி இந்நிமிடம் வரை எந்தத் தகவல்களும் வழங்கப்படாமலிருப்பதும் கவனிக்கத்தக்கது.

(கலைமகன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com