Friday, July 19, 2013

மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்து கல்வி கற்குமாறு மலாலாவுக்கு அழைப்பு!

பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்கின்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யுஸுப்ஸாய்க்கு கடிதம் ஒன்றை அனுப்பி, ‘தரீக் ஈ தலிபான்’ அமைப்பின் தலைவரான அத்னான் ரஷீத், சென்ற ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறுமி மலாலா துப்பாக்கிச் அவ்வமைப்பின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததைத் தான் தெரிந்து கொண்டதும் தான் மிகவும் அதிர்ச்சியுற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இயங்குகின்ற ‘தரீக் ஈ தலிபான்’ அமைப்பு, மலாலாவை ஏன் சுட்டது என்பது பற்றி விலாவாரியாக அந்தக் கடிதத்தில் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் தலைமையககத்திற்கு மலாலாவின் பெயருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் மலாலாவைத் சுட்டதற்குக் காரணம் மலாலா கல்வி கற்கச் சென்றதற்காக அல்ல. மாறாக சிறுமியரின் கல்வி பற்றி குரல் எழுப்பியதனாலாகும்.

மலாலா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதற்காக தான் கவலைப்படுவதாகவும், அவ்வாறு நிகழ்ந்திருக்க க் கூடாது என தான் நினைப்பதாகவும் அக்கடித்த்தில் அத்னான் ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், ரஷீத் மலாலாவிடமிருந்து மன்னிப்பை வேண்டிக் கடிதம் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலாலா சென்ற 12 ஆம் திகதி அமெரிக்க நிவ்யோக் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்குச் சென்று சிறுவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை பற்றி உரையாற்றிய விசேட உரையின் பின்னரேயே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500 தலைவர்களை கூடியிருந்த கூட்டத்திலேயே மலாலா கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

சிறுமியருக்கான உரிமைகள் பற்றிக் குரல் எழுப்பிய குற்றத்திற்காகவே தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று தற்போது தேரியுள்ள மலாலா யூசுப்ஸாய்க்காக ஐக்கிய நாடுகள் சபை ஜூலி 12 ஆம் திகதியை ‘மலாலா தினம்’ எனப் பெயர் சூட்டியுள்ளது. மலாலாவின் பிறந்த தினமும் அந்நாளிலேயே வருகின்றது. சென்ற 12 ஆம் திகதி மலாலா அவரின் 16 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com