Friday, July 19, 2013

நண்பனின் காதலியை 3 பேராக சேர்ந்து கற்பழித்தவர்களுக்கு பொலிஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் முருகையாவின் 20 வயது மகள் பாளை தெற்கு பஜாரில் தங்கி இருந்து பாளை கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தபோது குப்பனாபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் மலர்ந்தது. ஆனால் அந்த வாலிபர் மாணவியை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததுடன் வனிதாவை சந்திப்பதை தவிர்த்தார்.

இதனால் மனமுடைந்த மாணவி தனது காதலனின் நண்பர்களான ரமேஷ், கார்த்திக், கவுதம் ஆகிய 3 பேர்களுடன் தொடர்பு கொண்டு, தன்னை காதலனுடன் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட 3 வாலிபர்களும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சீவலப்பேரி அருகே உள்ள ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக 3 பேரும் கற்பழித்ததுடன் தாம் கற்பழித்ததை கையடக்க தெலைபேசியில் கற்பழிப்பதை காட்சிகளாகவும் படமாகவும் எடுத்ததுடன் சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குத்தான் அவமானம் என்றும் மாணவியை மிரட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

மிரட்டலுக்கு பயந்து மாணவி இந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆனாலும் அடிக்கடி இந்த சம்பவத்தை நினைத்து தனிமையில் அழுதுகொண்டிருந்ததை மாணவியின் பெற்றோர் கண்டு என்ன பிரச்சினை என கேட்டதும் மாணவி நடந்த சம்பவத்தை கூறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவிவை அழைத்துக் கொண்டு சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து சீவலப்பேரி காவல்துறையினர் மேலபாலாமடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கார்த்திக், கவுதம் ஆகிய 3 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com