நெல்சன் மன்டேலாவுக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள்! தற்போதைய ஜனாதிபதி உருக்கமான வேண்டுகோள்!
94 வயதான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாகவும், இதனால் நெல்சன் மன்டேலா எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமைக்காக பிரார்த்திக்குமாறு அந்நாட்டு மக்களையும், உலக மக்களையும் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா கேட்டக்கொண்டள்ளார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நலன் பெற வேண்டி அந்நாட்டு தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறுகின்றன. தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலைக்காக நெல்சன் மண்டேலா வெள்ளையின ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர், செயற்திறன் மிக்க அரசியல் செயற்பாடுகளில் விலகிய அவர் 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பொது மக்கள் முன்னிலையில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment