தயா மாஸ்டர் நேர்முகத் தேர்வில்.....!
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் (வேலாயுதம் தயாநிதி) முன்வந்துள்ளார்.
வட மாகாண தேர்தலில் போட்டியிடும்பொருட்டு ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி 53 அபேட்சகர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தியது. அதில் தயா மாஸ்டரும் ஒருவர்.
இந்த 53 பேரில் 40 பேர் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் பெயர்ப் பிரேரணை செய்துள்ளனர். பெயர்ப் பிரேரணை செய்தோரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண நகரபிதா ரிமேடியஸ் முதியப்பு, சாவகச்சேரி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் குமார் சர்வேந்திரன், யாழ்ப்பாண முன்னணி வியாபாரிகளில் ஒருவரான சத்தியசிவம் ராமநாதன். யாழ்ப்பாண மீன்பிடிச் சங்கத்தின் உப தலைவர் பொன்னம்பலம் ஆகியோரும் பெயர்ப் பிரேரணை செய்துள்ளனர்.
பெயர்ப் பிரேரணை செய்தோரை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் காலங்களிலும் நடாத்தப்படவுள்ளதுடன், ஈ.பீ.டீ.பீ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா தேசிய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோரும் தங்களது உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒன்றிணைப்பது பற்றிய அவதானத்தில் இருக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment