வானிலை சார்ந்த பணிகளைச் செய்யாமல் பந்து கைமாற்றுகிறது வளிமண்டலவியல் திணைக்களம்!!
வளிமண்டலவியல் திணைக்களம் சொல்வது போல எந்தவொரு அறிக்கையும் மாலை 5.00 மணிக்கு அமைச்சுக்குக் கிடைக்கவில்லை எனவும், அவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மீனவப் படகுகளுக்கு மீனவத் திணைக்களம் அறிவித்தல் வழங்குகின்றன எனவும் மீனவ மற்றும் நீர்வள அபிவிருத்தி பிரதியமைச்சர்சரத்குமார குணரத்ன குறிப்பிட்டார்.
வானிலை பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டியது அந்நிறுவனத்தின் பணி எனவும் அது மீனவத் திணைக்கள பணியல்ல எனவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வளிமண்டலத் திணைக்களம் இன்று 'பந்து கைமாற்றுகின்றது' என்றும் குறிப்பிட்டார்.
வளிமண்டலத் திணைக்களம் தனது தேசிய ரீதியிலான தனது கடப்பாடுகளைச் செய்யாது ஒவ்வொருவருக்கும் பந்து கைம்மாற்றுவதானது கவலைக்குரிய விடயமெனவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சரத்குமார, அவர்கள் எந்தவொரு ஊடகத்திற்கும் அதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
பலநாள் மீனவப் படகுகளுக்கு தெளிவுறுத்த முயற்சிசெய்ய முடிந்தாலும் ஒருநாள் மீனவப் படகுகளுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் கொடுக்கமுடியாத நிலையில் வானொலி மூலமேனும் தெளிவுறுத்தியிருந்தால் இவ்வாறானதொரு துன்பியல் நிலை தோன்றியிருக்காது என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment