தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்குமாறு விஷ்ணு தெய்வத்திடம் வேண்டுகிறார் ரணில்....!
மக்கள் மனங்கொள்ளும் அரசொன்றை அமைப்பதற்காக தமக்கு ஒருமுறையேனும் உதவுமாறு வேண்டியும், தற்போதைய அரசின் இலஞ்சம் மற்றும் ஊழல்களினால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் மக்களைப் பாதுகாக்குமாறும் வேண்டி நாடளாவிய விஷ்ணு தேவ பூசைகள் ஆயிரத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதன் முதற்கட்ட விஷ்ணு தேவபூசை நேற்று (10) தெவுந்தர தேவாலயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
நாடெங்கிலும் உள்ள 100 விஷ்ணு தேவாலயங்களில் இந்தப் பூசை நடைபெறவுள்ளதோடு, இலங்கை நாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவுள்ள விஷ்ணு தெய்வத்திடம் இந்த வேண்டுகோள் பூசைமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ள இவ்விடயம் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை ஒழுங்கு செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் தயா கமகே குறிப்பிட்டார்.
(கேஎப்)
2 comments :
பிரபாகரனை மலடன் என்று துக்ளக்கிடம் சொன்ன தினக்குரல் தனபாலசிங்கம் , ரணிலை என்ன வென்று சொல்லவார் ?
" இதுகுறித்து சில பிரபலங்களிடம் பேசினோம். தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இது குறித்து எங்களிடம் பேசினார். “புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழர் போராட்டமாகத்தான் பார்த்தன இலங்கை அரசாங்கங்கள். போர்க்குற்றம் என்பது இந்த ஆட்சியில்தான் என்றில்லை. எல்லா ஆட்சிகளிலுமே இருந்து கொண்டுதான் இருந்தன. தற்போது இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்பதைத்தான் பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால், 30 வருட காலத்தில் இறந்து போன தமிழர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்று ஜெனிவாவில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த அத்தனை நாடுகளுமே, ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க உதவுகிறோம் என்று இலங்கை ராணுவத்திற்கு உதவிய நாடுகளே! சர்வதேச அரசாங்கங்கள் தத்தம் அரசியலை மனதில் வைத்துக் கொண்டுதான் இலங்கை விஷயத்தை அணுகுகின்றன. இது நன்கு தெரிந்தாலும், அவர்களின் நன்மையில் நமக்கும் ஒரு நன்மை கிடைத்தால் நல்லது என்ற கோணத்தில்தான் அவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.
போர் வெற்றியை சிங்கள இன வெற்றியாகக் காட்டிக் கொண்டார் எங்கள் அதிபர். சிங்கள இயக்கங்கள் ஒரு அரசின் வெற்றியை தங்கள் இன வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்தன. வாக்குகளுக்காக, தமிழனை வீழ்த்தி விட்ட இமேஜை சிங்கள மக்களிடையே விதைக்கிறார் அதிபர். இது பேரினவாதச் சிந்தனை. பொதுபல சேனா என்ற பௌத்த அமைப்பு சமீப காலமாக சர்ச்சைகளில் அடிபடுகிறது. தமிழர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் அந்த அமைப்பு சச்சரவுகளைக் கிளப்புகிறது. அரசாங்கம் அந்த இயக்கத்தை ஆதரிக்கிறது என்று நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு உடனுக்குடன் ஏற்றுக் கொள்கிறது. இது நல்லதல்ல.
“இந்தியாவும் இலங்கையும் கலாச்சார, பண்பாட்டு ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவும் பிணைக்கப்பட்ட நாடுகள். தொப்புள் கொடி உறவு உள்ளதால், இந்தியா எந்த நேரமும் தலையிடும் என்ற பயம் இலங்கைக்கு இருக்க வேண்டும். இன்று மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருக்கலாம். ஆனால், மீண்டும் இந்திரா, ராஜீவ் மாதிரி ஒரு பவர்ஃபுல் தலைவர் வரும்போது, இந்தியா தலையிட்டு தமிழர்களுக்குச் சம உரிமையையும், அதிகாரப் பகிர்வையும் பெற்றுத் தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“அதே நேரம் இங்கு இலங்கையில் ஒரு மகாத்மா காந்தி, ஒரு நெல்சன் மண்டேலா போன்ற தன்னலமற்ற நல்ல தலைவர் தமிழனுக்கு அமையாமல் போனது எங்களின் துரதிர்ஷ்டம். புத்திஜீவிகள், கல்விமான்களின் தலைமை கிடைக்காமல், மலட்டுத்தனமான, வீரியமற்ற தலைமைகள் தமிழனுக்கு அமைந்து விட்டன. அதன் விளைவுகளைத்தான் இலங்கைத் தமிழர் அனுபவித்து வருகின்றனர்” என்றார் வீ.தனபாலசிங்கம்.
Man proposes and God disposes.HE is really the mighty one.We pray and ask Him to bless our precious country Srilanka
Post a Comment