Wednesday, June 12, 2013

சட்டத்தின் மூலம் மக்களின் மனங்களை கட்டியெழுப்ப முடியாது! முஸ்லிம்களே கிழக்கு மாகாணத்திலுள்ள .......... ஜனாதிபதி

இந்த நாட்டின் வரலாற்று உரிமைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தானது எனவும் சட்டத்தின் மூலம் மக்களின் மனங்களை கட்டியெழுப்ப முடியாது எனவும் மக்களின் மனங்களை சிறந்த பழக்கவழக்கங்கள் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்றும் இதை மதத்தலைவர்களால் நிசைவேற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாப்பாவல ஸ்ரீ சுமங்கலராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிற்கு இன்நாட்டிக்குசொந்தமானவை ஒரு இனத்திற்கோ சொந்தமானது அல்ல எனவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள முஹூது விகாரையின் வரலாற்று பொக்கிஷங்களை முஸ்லிம் மக்களே பாதுகாத்தனர் என்றும், முஸ்லிம் மக்கள் அவற்றை பாதுகாத்திருக்காவிட்டால், குறித்த பொக்கிஷங்கள் இன்று அழிந்து போயிருக்கும் என தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் வரலாற்று பொக்கிஷங்கள் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது என்பது உறுதியாகின்றது எனவும் அவற்றை பாதுகாப்பது அனைத்து மக்களதும் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் மூலம் பெற்ற வெற்றியை எதிர்கால பரம்பரையினர் அனுபவிக்க அனைவரும் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், நாட்டில் மீண்டுமொரு இரத்தம் சிந்தும் யுத்தம் தேவையில்லை உயிர்களை தியாகம் செய்து பெறப்பட்ட வெற்றியை பாதுகாக்க அனைவரும் அரப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com