Saturday, May 11, 2013

மாலை நேர வகுப்பென்று 11 மாணவியரின் மானத்தைக் கெடுத்தான் ஆசிரியன்....!

கல்கிரியாகம பிரதேச பாடசாலையொன்றில் தரம் நான்கில் கல்விகற்கக் கூடிய மாணயர் பதினொரு (11)பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியர் இன்று (11) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஆசிரியர், சட்டத்தரணியொருவர் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை கல்கிரியாகமபொலிஸில் சரணடைந்துள்ளார்.பாடசாலை முடிந்ததும் மாலை நேர வகுப்பு எனக்கூறி தனது வகுப்பறையில் வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாதென ஆசிரியர் மாணவிகளை மிரட்டியதாக மாணவியர் தெரிவித்துள்ளனர். மாலை நேர வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவியொருவரின் வெள்ளை சட்டையில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த குறித்த மாணவியின் தாய் அவரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்து அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொடூர வேலை செய்துள்ள இந்த நாசகாரன் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.நீண்ட காலமாக இவர் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  May 11, 2013 at 5:53 PM  

Why not the heads of the schools not taking care of the discipline of the school.Just punishing the students is not the defnition to discipline.
The heads should know to keep the entire students and the teachers under discipline,just allowing the male teacher to conduct evening classes and bring the female children to inconvenience is completely their fault as such the heads of the schools to be punished.It is very essential
a female teacher/caretaker is to be appointed to take care of the female children,until the female children leave the school

Anonymous ,  May 12, 2013 at 6:37 AM  

ivanukalla Miner Kuncha sudanum

Anonymous ,  May 18, 2013 at 9:49 AM  

it happend even in colombo leading tamil school also...please awake head of schools....

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com