சிறு கட்சிகள் என்னசொன்னாலும், நாம் வடக்கில் தேர்தல் வைத்தே தீருவோம்...!
கூட்டணி அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் சிறு அரசியல் கட்சிகள் என்ன சொன்னாலும், அரசு வடக்கில் தேர்தலை நடாத்தியே தீரும் என, அரச நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் டப்ளிவ். டீ. ஜே. செனவிரத்ன குறிப்பிட்டார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில்தேர்தலை நடாத்துவற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்’கம் மேற்கொண்டுவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இதே சந்தர்ப்பத்தில், பொலிஸ் பாதுகாப்பு, இடங்கள் மீதுள்ள அதிகாரம் என்பன நீக்கப்படாமலேயே வடக்கில் தேர்தல் வைக்கப்படுவதற்கு தேசிய சுதந்திர முன்னணி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சஊடகமொன்றுக்குக் கருத்துரைக்கும்போது, ‘வடக்கில் நடாத்தவுள்ள தேர்தலுக்குத் தான் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், அவ்வாறு தேர்தல் வைப்பதானது தமிழீழம் சார்ந்த போருக்கு அடிக்கல் நாட்டுவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment