Thursday, April 25, 2013

இம்முறை மூன்று மே தின ஊர்வலங்களை ஒழுங்குசெய்துள்ளது ஐதேக.

பணிபுரியும் ஊழியர்களின் உரிமைகளை ஊர்ஜிதப்படுத்துமாறு, அரசை வற்புறுத்தி இம்முறை மே தின ஊர்வலங்கைளக் நடாத்துவதற்கு ஐ.தே.க ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது.

ஐதேக தலைமையில் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து நடாத்தும் மேதின ஊர்வலம், தொழிற் சங்க மே தின ஊர்வலம், இளைஞர்மே தின ஊர்வலம் என்பனவே நடாத்தப்பட்ட ஊர்வலங்களாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து அனைத்து தொழிற் சங்கங்களும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மக்களின் ஒத்துழைப்போடு, ஸ்ரீஜயவர்த்தன கோட்டை ‘சிறிகொத்த’ தலைமையகத்திலிருந்து, மே முதலாம் திகதி இந்த ஊர்வலத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், தேசிய இளைஞர் முன்னணி மற்றும் ஐக்கிய இலங்கை மாதர் முன்னணியினரின் இளைஞர் மே தின ஊர்வலம் பதுளையில் அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகள் நடாத்தும் மே தின ஊர்வலம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களின் தலைமையில், மே முதலாம் திகதி குருணாகலை நகரத்தில் பிற்பகல் நடைபெறவுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com