ஈராக்கில் உட்பூசல்! 50 இற்கும் மேற்பட்டோர் பலி!
ஈராக் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கும், சுன்னி முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக தற்போது 53 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். ஹவிஜாவில் நடைபெற்ற எதிர்ப்பார்ப்பாட்டமொன்றை தடுக்க அரச தரப்பு முற்படுகையிலேயே இந்த பிரச்சினை எழுந்துள்ளது.
சென்ற செவ்வாய்க் கிழமை (23) இடம்பெற்ற குழப்பநிலையானது, சென்ற டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரச்சினையை விடவும் பெரிதாகியுள்ளது. இவ்வாறு பெரிதாவற்குக் காரணம் அந்நாட்டு சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நூர் அல் மலிக் தமது அரசாங்கம் அவர்களை அடிக்கடி நசுக்கியமையே ஆகும்.
இந்தப் பிரச்சினை காரணமாக அரச தரப்பில் இருந்த சுன்னி முஸ்லிம்கள் இருவர் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். கல்வியமைச்சர் மொஹமட் அல் தமீம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் ஸாலிஹ் அல் முத்லக் எனும் இருவருமே அவ்வாறு இராஜினாமாச் செய்தவர்களாவர்.
இராணுவத்தினர் தம்மைத் தாக்கும்போது, தம்மிடம் ஆயுதங்கள் ஏதும் இருக்கவில்லை என, பொதுமக்களில் ஒருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு கருத்துரைத்துள்ளார். ஆயினும் இராணுவத்தினர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, ஊர்வலத்தை கலைப்பதற்கும், அவர்களை தாக்குவதற்கும் காரணம், அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தமையினால்தான் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவத்தினர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்களில் பலரை வாகனத்தை மேலேற்றிக் கொன்றுள்ளனர் எனவும் அறியவருகின்றது. இந்தப் பிரச்சினை காரணமாக அல் ரஷாத் மற்றும் அல் ரியாத் பாதுகாப்பு காவலரண்கள் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஈராக் அரசு, தற்போது ஊரடங்குச் சட்டத்தை அந்த மாகாணத்தில் அமுல்படுத்தியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களது குடிசைகளைத் தேடி அரசாங்கம் தீ வைக்கப்பட்டுவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment