பொது பல சேனாவின் கட்டளை அதிகாரி கோத்தபாய
பொது பல சேனா இயக்கத்தினரின் செயற்பாடுகளின் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிற்பதாகவும், அவர்தான் கோத்தபாய ராஜபக்ஷ எனவும் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.
அந்தச் செய்தியை உண்மைப்படுத்தும் வகையில் இன்று (09)பொது பல சேனா இயக்கத்தினரின் தலைமைத்துவப் பயிற்சி நிலையமொன்று, அவ்வியக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரரின் அநுசரணையில் உதயமாகவுள்ளது.அதனைத் திறந்து வைப்பதற்காக அரச பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த மைக்கல் காஸ்ட்டிவேயார் என்பவரினால் காலி பிலான பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட நெதிமால பௌத்த கலாச்சார மத்திய நிலையத்துடன் தொடர்புடைய ‘மெத்செவன’ கல்வி மற்றும் கலசாச்சார மத்திய நிலையமே இவ்வாறு பொது பல சேனா இயக்கத்தினரின் தலைமைத்துவப் பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ள இந்த நிலையத்தில் பொது பல சேனா இயக்கத்தினரின் காரியாலயமொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment