அடப்பாவமே! பாடசலை மாணவியர் மூவரையும் கெடுத்திருக்கிறார் பேரூந்து நடாத்துநர்
பாடசாலை மாணவியர் மூவரை தனியார் பேரூந்துக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் காலி - கொழும்பு தனியார் பேரூந்து நடாத்துநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறையில் கல்வி கற்கும் இரட்டைச் சகோதரிகள் இருவரையும் களுத்துறைப் பிரதேசத்திலுள்ள ஓரிடத்தில் பேரூந்துக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்ததாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த இரு மாணவியரும் பேரூந்தில் இருந்து இறங்கியதும், 07 வயது மதிக்கத்தக்க மற்றொரு மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இரட்டைச் சகோதரிகள் பாடசாலைக்குச் சென்று தமது வகுப்பாசிரியையிடம் தமக்கு நடந்த நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டதும், வகுப்பாசிரியை தனது கணவனான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விஜித கருணாகலகேவுக்குத் தெரிவித்துள்ளார்.
அத்தகவலின் படி உடனடியாக காரியத்தில் இறங்கிய பொலிஸ் உதவி அத்தியட்சகர் பேரூந்தை வழிமறித்து நிறுத்தி பேரூந்தின் நடாத்துநரைக் கைது செய்துள்ளார்.
07 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை பற்றி அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதியாகியுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment