Saturday, March 9, 2013

இலங்கைப் பணிப்பெண்களில் 200 க்கு மேற்பட்டோர் குவைட் சிறைச்சாலைகளில்

இலங்கைப் பணிப்பெண்களில் 200 பேருக்கு மேற்பட்டோர் எவ்விதக் குற்றங்களும் இழைக்காமல் குவைட் அரசாங்கத்தின் தண்டனைக்கு ஆளாகிவருகின்றனர் எனவும், அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குவைட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இலங்கைப் பணிப்பெண்கள் குறிப்பிட்டனர்.

நேற்று முன்தினம் (07), குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பணிப்பெண்கள் 33 பேரிடமிருந்தே இந்த உண்மை வெளியானது. அவர்கள் தொழிலுக்காக குவைட் அரசாங்கத்திற்குச் சென்று, அந்நாட்டு எஜமானர்களாலும் தொழில் வழங்கும் நிறுவனங்களாலும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் அதிகமானோர் அந்நாட்டு எஜமானர்களின் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகி, குறித்த இடங்களிலிருந்து ஓடிப்போய் வேறு இடங்களில் பாதுகாப்பு வேண்டியோராவார். அந்நாட்டில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான ஆவணங்கள் ஏதுமின்றி அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

இவர்கள் குவைட் அரசாங்கத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் மூலமாக தற்காலிக விமானப் பயணச்சீட்டுக்கள் மூலமே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாதிப்பேர், தங்களுக்கு தங்கள் எஜமானர்கள் சொல்லவியலாத துன்பங்களை விளைவித்ததாகவும் பின்னர் பாதுகாப்பு வேண்டி, அந்நாட்டு தொழில் முகவர் நிலையங்களுக்குப் போனவேளை அங்கு அவர்களால் துன்புறுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் கூறுகின்றனர். தங்களைப் போன்ற 200 க்கு மேற்பட்ட இலங்கைப் பணிப்பெண்கள் அந்நாட்டுச் சிறைச்சாலைகளில் குற்றம் இழைக்காமல் சிறைச்சாலைகளில் வாடுவதாகவும், அவர்களின் பிரச்சினைகள் ஏது எனக் கண்டு உடனடியாக தீர்வினைப்பெற்றுக் கொடுத்து, இலங்கைக்குள் காலடி வைப்பதற்காக ஆவன செய்யுமாறும் அந்தப் பெண்கள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர்.

(கேஎப்)

1 comments :

Arya ,  March 11, 2013 at 10:43 PM  

என்ன தான் நடந்தாலும் இவள்கள் அரபுகாறனுக்கு கவட்டை விரிக்க வரிசையில் நிக்கிறாள்கள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com