அமெரிக்காவின் சித்திரவதை முகாமில் உண்ணாவிரதம்!
அல்குர்ஆனை அவமதித்தது மற்றும் தனிப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்ததற்கு எதிராக அமெரிக்காவின் குவன்தனாமோ சிறைச்சாலையில் பல கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி 5 பேருடன் ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்போது 24 பேராக அதிகரித்திருப்பதாக குவன்தனாமோ தொடர்பாடல் இயக்குனர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டடதுடன் இந்த ஆர்ப்பாட்டம் சிறைச்சாலை எங்கும் பரவி வருவதாக வெளியான செய்தியை அவர் நிராகரித்தார்.
கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி தொடக்கம் சோதனை நடவடிக்கை மூலம் கைதிகளின் புத்தகம், சி.டி., போர்வைகள், என தனிப்பட்ட பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கைதிகளின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் கைதிகளின் எடை ஒன்பதிலிருந்து 22 கிலோ கிராம்வரை குறைந்திருப்பதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
கியூபாவின் குவன்தனாமோ பேயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்த நடவடிக்கையின் கீழ் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் பலர் சிறைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment