புத்தாண்டுக்கு கிடைத்த தற்காலிக அதிஸ்டம்
புத்தாண்டு காலப்பகுதியில் தற்காலிக பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கான அதிகாரத்தை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அடுத்த மாதம் 8ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை புத்தாண்டு விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், புத்தாண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment