Thursday, March 21, 2013

இலங்கை விடயத்தில் ஐ.நா அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. வெனிசுலா பிரதிநிதி சீர்ற்றம்.

அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள பிரேரணைகள், 12 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகள் செலுத்தப்பட்டதுடன், எதிராக 13 வாக்குகள் செலுத்தப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பிலருந்து தவிர்ந்து கொண்டன. இன்று பிற்பகல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை, வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. முதலில், இப்பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு, நாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

வெனிசுலா, இலங்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், 30 ஆண்டுகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, 3 ஆண்டுகளுக்குள் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றத்தை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாதென, தெரிவித்தார்.

இதனால் பக்கசார்பின்றி செயற்பட்டு, இலங்கையின் உண்மை நிலைமையை உணர்ந்து, தீர்மானங்களை எடுப்பது பொருத்தமானதென, வெனிசுலா பிரதிநிதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கொள்கைக்கு ஏற்ப, செயற்படுவது அனைவரது பொறுப்பாகும். எனினும் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் மூலம், இந்த சகல கொள்கைகளையும் மீறி, அவை மறக்கடிக்கப்பட்டு, இந்த பேரவை, அரசியல் மயப்படுத்தப்பட்டு, அரசியல் நோக்கில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

இவ்விதமான செயற்பாடுகள் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாடு தொடர்பாக, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை சரிவடைவதாகவும், வெனிசுலாவின் கருத்தாகுமென, அந்நாட்டு பிரதிநிதி தெரிவித்தார்.

எக்வடோர், கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள பிரேரணை, பக்கசார்ப்பானது என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பக்கசார்பாக செயற்பட்டுள்ளதாகவும், எக்வடோர் சுட்டிக்காட்டியுள்ளது.

தாய்லாந்தும், இலங்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. 1972ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஸ்தாபிப்பதற்கு, அடிப்படையாக அமைந்த கொள்கைகளை மீறிச்சென்று, இலங்கை தொடர்பான தீர்மானத்தை எடுத்தமைக்கு, தாய்லாந்து கடுமையான விமர்சனங்களை தெரிவிப்பதாக, தாய்லாந்து பிரதிநிதி தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா கருதது தெரிவிக்கையில், சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கை மனித உரிமை பேரவையின் முன்னால் திறந்த மனதுடன், செயற்பட்டதை பாராட்ட வேண்டுமென, தெரிவித்தார். சர்வதேச மீளாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததன் மூலம், இலங்கை, அவர்களது நேர்மையான தன்மையை உலகிற்கு வெளிக்காட்டியதாகவும், இந்தோனேசியா சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்ட ஜப்பான் கருத்து தெரிவிக்கையில், இலங்கை மேலும் பல விடயங்களை புரிய வேண்டியிருந்தபோதிலும், இதுவரை கண்டுள்ள அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்துவது ஆகியவற்றில் இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாகவும், அவை பாராட்டத்தக்கவையென்றும், குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய சங்கம், இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் விடயங்கள் தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ளதுடன், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் தொடாபாக, ஆராய்ந்து வருவதாக, தெரிவித்துள்ளது. எனினும், எதிhகாலத்தில் இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு, ஐரோப்பிய சங்கம் தொடர்ந்தும் தயாராகவிருப்பதாகவும், அச்சங்கத்தின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான், இலங்கை தொடர்பான பல முக்கிய விடயங்களை வெளியிட்டதுடன், 30 ஆண்டுகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கையை ஓர் ஸ்திரமான நிலைக்கு இட்டுச்செல்வதற்கான காலத்தையும், சந்தர்ப்பத்தையும் வழங்குவது, அனைவரது பொறுப்பாகுமென, தெரிவித்தது.

அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைத்த போதிலும், அதில் அடங்கியுள்ள சில விடயங்கள் அடிப்படையற்றவையென, பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவும், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறியபோதிலும், அமெரிக்காவிற்கு ஆதரவாகவே, அது வாககளித்தது. எனினும், இலங்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்த பல நாடுகள், வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்ட நாடுகளும், இலங்கை தொடர்பான திருப்தியான கருத்துகளை தெரிவித்தமை, இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருப்பதை போன்று, இலங்கைக்கு சென்று அங்கு நிலவும் உண்மை நிலையை கண்டறிவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பொறுப்பாகுமென்றும், அந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த பிரேரணை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டின் அடிப்படை கொள்கைக்கு முரணானதென, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்த பிரேரணை மற்றும் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணைக்கு சமனாக அமைந்திருப்பது, பிரச்சினைக்குரியதென, அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா முன்னர் சமர்ப்பித்த பிரேரணையை மீறி சென்று, வேறு பிரேரணைகளையும், இலங்கை தொடாபாக, சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை, அமைசசர் மஹிந்த சமரசிங்க, கண்டித்து பேசினார்.

எல்ரிரிஈ பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, 3 ஆண்டுகளும் 10 மாதங்களும் பூர்த்தியடைந்துள்ளன. தற்போது புதிய நெருக்கடிகள் உருவாகியுள்ளன. எனினும், அந்த நெருக்கடிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தாமல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரேரணைகளை சமர்ப்பிப்பது, சர்ச்சைக்குரியதென, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்ரிரிஈ பயங்கரவாதத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக ஏன் செயற்பட வேண்டுமென்பது, கேள்விக்குரியாகுமென்றும், திரு. சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடாபாக, இந்த அறிக்கையில் குறிப்பிடப்ட்ட சில விடயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கொள்கைக்கு முரணானது என்பதை, தெளிவாக உணர முடியும். குறிப்பாக இலங்கை தொடர்பாக சேகரிக்கப்பட்ட சில விடயங்கள், இக்கொள்கையை மீறி திரட்டப்பட்டவையென்பது, சர்ச்சைக்குரியதென்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு அடிப்படை தகவல்களின் பேரில், இலங்கை அரசாங்கத்தின் எந்தவித அறிவுறுத்தல்களும் பெற்றுக்கொள்ளப்படவில்லையென்பது, தெரியவந்துள்ளது. வெளி தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவை தயாரிக்கப்பட்டிருப்பது, எந்தளவு நியாயமானது என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சகல நாடுகளிடமும் விடுத்த கோரிக்கையில், இலங்கையில் உணமையான சமாதானம் மற்றும் சகவாழ்வை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் பாரிய பணிக்கு, இந்த சந்தர்ப்பத்தில், ஆதரவு வழங்குவது இன்றியமையாத விடயமென, தெரிவித்தார், வீண் பிரச்சினைகளை உருவாக்கி, இந்த வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கவேண்டாமென, அமைச்சர் சமரசிஙக், சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

1 comments :

Arya ,  March 22, 2013 at 3:45 AM  

What had done America is unjustice and unfaithfull.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com