சட்டக்கல்லூரி மாணவியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பணம்.
சட்டக்கல்லூரி மாணவியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான அறிக்கை மாநில சேவைகள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார அறிக்கையினை சுகாதார அமைச்சின் செயலாளர். வைத்தியர் நிஹால் ஜயசிங்க சமர்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வைத்தியர் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் கவனயீனத்தினால் கைகளை இழந்துள்ள மாணவி தொடர்பில் கவலை அளிப்பதாக தெரிவித்த அவர் இந்த விடயம் தொடர்பில் மாநில சேவைகள் ஆணைக்குழுவினரிடம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது அறிக்கையில் பரிந்துரைத்தும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment