ஏகாதிபத்தியவாதிகளின் சதித்திட்டம்தான் ஹலாலுக்கு எதிரான பிரச்சாரம்!!
‘தமிழீழமாக இருந்தால் என்ன வேறு ஒரு நாடாக இருந்தால் என்ன? எந்தவொன்றும் நாடென்று பிரகடனப்படுத்தப்பட வேண்டியது ஐநாவிலேயே.
அது இணங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்டுள்ள ஐநாவில் அதிக பட்ச வாக்குகளைப் பெற்றாலேயே அது சாத்தியமாகும்.
இன்று சிங்கள - முஸ்லிம்களுக்கிடையில் மனக்கிலேசத்தையும் குரோதத்தையும் ஏகாதிபத்தியவாதிகளே ஏற்படுத்தியிருக்கிறார்கள்’
இவ்வாறு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான லால் காந்த அநுராதபுரத்தில் நடைபெற்ற விழாவொன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம் ஒன்றினால் இன்னொரு இனவாதத்தை தகர்த்து இல்லாதொழிக்க முடியாது. வடக்கில் ஈழத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களின் விருப்பினைப் பெற்றுக் கொள்ளவேண்டின் அவர்களின் உள்ளம் புண்படாதவாறு நடந்துகொண்டாலே அவர்கள் நம்பக்கம் இருப்பார்கள்.
இன்று ஏகாதிபத்தியவாதிகளே முஸ்லிம்களுக்கும் - பௌத்தர்களுக்குமிடையில் பிளவினை ஏற்படுத்திவருகிறார்கள். இதனை அறியாமல் சிலர் உச்சஸ்தானியில் குரல் எழுப்புகிறார்கள். இதனால் ஆகப்போவது எதுவுமில்லை.br />
ஹலாலுக்கு எதிரான குரல் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். எனவே, இதுவிடயத்தில் நன்கு சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று மேலும் அவர் அங்கு தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment