கோப்பாய் விபத்தில் துடிதுடித்து பிரிந்த உயிர்!
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவு கோண்டாவில் சந்தியருகில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேற்றிரவு 10 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதுடன் இவர்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், ஏனைய நால்வரும் திடீர் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment