புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது - தேர்தல்கள் செயலகம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் காலத்திற்குள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையான காலப் பகுதியே தேர்தல் காலம் என கருதப்படும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்த முடியாமற்போயுள்ளதுடன் இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 80க்கும் மேற்பட்ட குழுக்கள் ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment