‘விமல் ஏன் தாமதிக்கிறாரோ, அறியவில்லை’ என்கிறார் கயன்த
அரசாங்கத்திற்குள் மேலெழுந்துள்ள குழப்பநிலை ஏகாதிபத்திய சூழ்ச்சியே என்பதை விமல் வீரவங்ச வெளியிடாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் என இன்று (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது பாராளுமன்ற உறுப்பினர்கயன்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் பாசிக்குடாவில் ஏற்பட்ட விடயம் சார்பாக அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, தமக்கு உயிர் மிரட்டல் வந்துள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவும், அரசாங்கத்துக்குள் இருப்பது பனிப்போர் அல்ல பாரிய யுத்தமே என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கயன்த குறிப்பிட்டார்.
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் உயிருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறாயினும் மேலெழுந்துள்ள பிரச்சினைக்கும், மைத்திரிபால சிரிசேனவின் அறிக்கைக்கும் அரசு மேற்கொள்ளவுள்ள தீர்வு யாது என்பதை உடனடியாக அறியத் தரவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment