பழ.நெடுமாறன் சென்னையில் கைது
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று (04) முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியபோது வைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக்கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலிருந்து காலை 11 மணிக்கு ஊர்வலமாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட 5 கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட போதே பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்
1 comments :
Why not these bogus politicians mind their own business.
Post a Comment