ஜெனீவாவில் இருந்து நாடுதிரும்பினார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்கநேற்று (03) நாடுதிரும்பியதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்தது.
மனித உரிமை பேரவை மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு பங்கேற்றதுடன் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த மாதம் 27 ஆம் திகதி உரையாற்றியதுடன் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை அவர் இங்கு விமர்சித்ததோடு, அதனை நிராகரித்திருந்தார்.
அமைச்சர் சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவாவில் வைத்து ஏனைய நாட்டு பிரதிநிதிகளுடன் சந்தித்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பேச்சு நடத்தியதுடன் பேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறும் கோரியுள்ளார்.
தற்போது அமைச்சருடன் ஜெனீவா சென்ற இலங்கைக்குழு தொடர்ந்து தங்கியுள்ளனர் அமைச்சர் சமரசிங்க அடுத்த வாரம் மீண்டும் ஜெனீவா செல்ல உள்ளதுடன் இலங்கையில் தங்கியிருக்கும்அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் பேசவுள்ளதாகவும் அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment