புலிகளினால் நடத்தப்பட்ட கொலை/மனித உரிமை மீறல்களை கண்டித்து ஜெனீவாவில் போராட்டம்!
இலங்கையில் புலிகளினால் நடத்தப்பட்ட கொலைகளை/மனித உரிமை மீறல்களை கண்டித்து ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி ஜெனீவாவில்<"span id="fullpost"> அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
புலிகளினால் வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட கொலைகளை மனித உரிமை மீறல்களை கண்டித்தும் கெபதிகொல்லாவ, துடுவௌ பிரதேச மக்கள் புலிகளினால் கொல்லப்பட்டதாகவும், அரந்தாலாவையில் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரகள் கோஷமெழுப்பத் திட்டமிட்டுள்ளதுடன் இது தொடர்பான புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
0 comments :
Post a Comment