யாழ்ப்பாணம் நோக்கிய யாத்திரை ஆரம்பித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையர் என்ற வகையில் இந்நாட்டுக்கும், உலகத்திற்கும் சமா தானத்தைப் பெற்றுக் கொடுக்க அணி திரள்வோம்” என்ற தொனிப் பொருளுடன் இளைஞர் சமாதானப் பாத யாத்திரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் கதிர்காமம், கிரிவெஹர புனித பூமியில் நேற்றுக் காலை (6ஆம் திகதி)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகம், இளைஞர்களுக்கான நாளை அமைப்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இரு வாபத்துவ முதல் தல் அரண வரை அமைப்பு ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள யாழ்ப்பாணத்திற்கான இந்த சமாதான பாதயாத்திரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தைச் சென்றடையவிருக்கின்றது.
இந்த இளைஞர் பாதயாத்திரையில் இந்தியாவின் ஹிமாலயப் பிரதேசத்தைச் சேர்ந்த க்வால் வங்க்துர்க்பா என்ற பெளத்த மதத் தலைவரின் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட தேரர்களும் பங்குபற்றியுள்ளனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் கலை நடனங்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பாத யாத்திரை தொடராக 30 நாட்களுக்கு இடம்பெறவிருக்கின்றது.
கிரிவெஹர புனித பூமியில் ஆரம்பமான இப்பாத யாத்திரை கதிர்காமம், சிவனொளிபாதமலை, கண்டி, மாத்தளை, தம்புள்ள, பொலன்னறுவை, அனுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைய விருக்கின்றது.
இப் பாத யாத்திரை முக்கிய நகர்களை அடையும் போது அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டின் பல பிரதேசங்களையும் சேர்ந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்கள் பெருமளவில் பங்கு பற்றியுள்ள இப் பாத யாத்திரை கிரிவெஹர விகாரையில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
இப் பாத யாத்திரையின் தொடக்க வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சஜீன்வாஸ் குணவர்தன, உதித லொக்குபண்டார, மனுஷ நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித்பியும் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
0 comments :
Post a Comment