உங்கள் செயற்பாடு புலிகளுக்கு உதவுதாக அமைந்துவிடக்கூடாது. ரொபர் ஓ பிளேக்கிடம் சுப்ரமணிய சுவாமி.
ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவருவதாக கூறப்படுகின்ற தீர்மானமானது இலங்கைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது அதன் உத்தேச நகல் வெளியானதிலிருந்தே ஊர்ஜிதமானது. இந்நிலையில், வொஷிங்டனில், தெற்கு மற்கும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கு பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ. பிளேக்கை சந்தித்த இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி „ஜெனீவா மனித உரிமை பேரவையில், அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நகல் வரைபு, விடுதலை புலிகளின் நெருக்கமான பிரிவினைவாத சக்திகளின் வெற்றியாக அமைந்து விடக்கூடாதென" தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பாக, கொழும்புடன் கருத்தொருமைபாட்டை காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, ஒபாமா நிர்வாகத்தை, சுப்ரமணியம் சுவாமி கேட்டுள்ளார். இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இதனை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளதாக, பீ.ஜி.ஐ. செயதி சேவை தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடனும், சுவாமி பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டால். அது விடுதலை புலிகளுக்கு புத்துயிரளிப்பதாக அமையுமெனவும், இது அனைத்து தரப்பினரது நலன்களுக்கு உகந்தது அல்லவென்றும் தெரிவித்துள்ள சுப்ரமணியம் சுவாமி, மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தெரிவித்துள்ளார்.
ஐ.நா. கட்டமைப்புக்குள் இலங்கையால் ஏற்றுக்கொள்ளாத முடியாத எந்தவொரு தீர்மானத்தையும் ஒருபோதும் அமுல்ப்படுத்த முடியாதெனவும், இதற்கு எதிராக, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துமென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
2 comments :
Mr.Suwami are correct and true. LTTE is a terrorist for all nation.
Mr Subramniya Swami`s predictions are worthy.As a Harward university scholar and an experienced politician he has the capablity to predict about the future.There is an explosion of scholarly interest in his politics
Post a Comment