இன்று மகா சிவராத்திரி தினமாகும்.
"அம்மையே அப்பா உப்பிலா மணியே அன்பின் விளைந்த ஆரமுதே" என சிவனடியார்கள் சிவன் அருட் பெறும் சிறந்த நாளே சிவராத்தியாகும். சிவன் எழுந்தருளி அருள்பாளிக்கும் இந்நாளில் பசித்திருந்து விழித்திருந்து விரதம் காப்போருக்கு சிவனருள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும். சிவராத்திரி 5 வகைப்படும் அவை நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி என்பனவாகும். மாசி மாதத்து தேய்பிறை காலத்து சதுர்த்தியில்நிகழும் இராத்திரியே மகா சிவராத்திரியாகும். இந்துக்களின் பிரதான விரதங்களில் மகத்தான பலன் அளிக்க கூடியதும் மகா சிவராத்திரி விரதமாகும்.
இத்தனை மகிமை வாய்ந்த மகா சிவராத்திரி இந்துக்களுக்கு மாத்திரமன்றி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஒரு முறை காத்தல் கடவுளான திருமாலுக்கும் படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் தமக்குள் யார் பெரியவர் என் மமதை ஏற்பட்டு போர் நடைபெற்றது. இப்போரின் போது பெரியதொரு ஒளிமிக்க ஜோதி உருவாயிற்று அச்ஜோதி பிழம்பு அடியும் முனியும் அறிய முடியாத வகையில் மேலும் கீழும் உயர்ந்து நின்றது. பிரம்மாவும் திருமாலும் எய்த அஸ்திரங்கள் எல்லாவற்றையும் இச்சோதி உள்வாங்கியது. இதனை கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர். அப்போது ஒரு அசரீரி கேட்டது நீங்கள் காணுகின்ற ஜோதியின் அடியை அல்லது முடியை காண்கின்றார்களோ அவர்களே இவ்வுலகில் பெரியவர் என அவ் அசரீரி கூறியது.
இதனையடுத்து திருமால் பன்றி உருவம் எடுத்து நிலத்தை அகழந்து அடியை தேடினார். பிரம்மா அன்னத்தின் வடிவம் எடுத்து ஆகாயம் முடியை தேடினார். இருவராலும் ஜோதியின் அடியையோ முடியையோ காண முடியவில்லை. இதனால் அவர்களின் செருக்கும் மமதையும் ஒழிந்து சிவனே முழுமுதற் கடவுள் என அறிந்து அவரை தொழுதார்கள். இவ்வாறு திருமாலும் பிரம்மாவும் அடி முடி தேடிய நாளை சிவராத்திரியாகும். மகா சிவராத்திரி தினத்தன்று காலையில் இந்துக்கள் நீராடி வீட்டில் சிவ பூஜை செய்வதுடன் சிவாலயங்களுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டு சிவ தோத்திரங்களை ஓதுவர்.
மாலையில் ஆலயம் சென்று 4 சாம பூஜைகளிலும் கலந்து கொள்வர். இப்புனித தினத்தில் நித்திரை நீத்து சிவதோத்திரம் பாராயணம் செய்து மறுநாள் காலையில் நீராடி சூரியன் உதிக்கும் முன்னர் பாரணை செய்ய வேண்டும். அன்றைய பகல் பொழுதை சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ இந்துக்கள் பொழுதை கழிப்பார்கள். இவ்வாறு 24 வருடம் விரதம் நோற்று, பின்கோதானம், பூதாணம், சுவர்ணதானம், முதலியன செய்து விரதத்தை பூர்த்தி செய்பவர் சிவகதி அடைவார் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்.
0 comments :
Post a Comment