Sunday, March 10, 2013

இலங்கைத் தழிழர்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழைகள் அல்ல. ஷாவேந்திர சில்வா புகழாரம்:

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அண்மையில் சென்னையில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த தமிழகத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா „யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடாத்துமாறு கோரி இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ம் ஆண்டிலிருந்து அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு இலங்கையைச் சேர்ந்து அப்பாவித் தமிழரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் பிடியிலிருந்த போது பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது சமாதானத்தை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்கொலை செய்து கொண்டவரின் கடிதம் பாதி தட்டச்சு செய்யப்பட்டுள்ளதுடன் பாதி கையால் எழுதப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப் பகுதியில் புலிகள் மிகவும் கடுமையான ஊடகப் பிரச்சாரங்களை முடுக்கி விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஊடகப் பிரச்சாரங்களினால் தமிழ் மக்களை திசை திருப்ப முடியாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  March 11, 2013 at 5:41 PM  

Srilankans are strong minded and not cowards , Mr. Shavendra de Silva´s comments reasonable.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com