Sunday, March 10, 2013

அமெரிக்காவின் தீர்மானம் ஒருதலைப்பட்டமானது. ஐ.நா நிரந்தர பிரதிநிதி.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கொள்கைகளுக்கு புறம்பாக அமெரிக்கா செயற்படுவதாகவும் அது கொண்டுவருகின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒரு தலைப்பட்சமான பிரேரணையென்றும் இலங்கைக்கான ஐ.நா நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விநியோகிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே, ரவிநாத ஆரியசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனீவாவில் உள்ள அமெரிக்க பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற கூட்டத்தில் பேசிய அவர் இலங்கை தொடர்பாக சரியான புரிந்துணர்வின்றி இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே, இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசனம் தெரிவித்துள்ள ஆரியசிங்க ஐ.நா. அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும், பரஸ்பர கருத்துகளை தெரிவிக்கும் நடைமுறையொன்று பேணப்பட வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக, மனித உரிமை பேரவை, திறந்த பார்வையுடன் நோக்க வேண்டுமென வேண்டியதுடன் 30 வருடகாலமாக நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், 4 வருட குறுகிய காலத்தில், இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்கள், அனைவரினாலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமை தொடர்பான அமெரிக்க பிரதிநிதியை சந்தித்தபோது, இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடாது என, தான் வேண்டுகோள் விடுத்ததாக, ரவிநாத ஆரியசிங்க நினைவுகூர்ந்ததுள்ளதுடன் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது எனவும் சுய முயற்சியில் மீண்டும் மேலெழுவதற்கு, பாடுபடும் வேளையில், இலங்கையில் அமுல்ப்படுத்தப்படும் செயற்திட்டங்களை குறைத்து மதிப்பிடக்கூடாதென்றும், ஐ.நா. விற்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


2 comments :

Anonymous ,  March 10, 2013 at 10:43 PM  

This a correct anwer for the world tamil LTTE!

Anonymous ,  March 11, 2013 at 5:28 PM  

Strong can easily squeeze the neck of the weak,it can be an unjustice
act,but the strong always try to flex its muscles,because it is strong.Frightened societies just watch,because they are speechless.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com