தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பயங்கரவாதத்திற்கு நிகரானவை. பிரசாத் காரியவாசம்.
இலங்கையில் யுத்த குற்றம் இழைக்கப்பட்டதாக கூறி, எல்ரிரிஈ யிற்கு துணைபோகும் சக்திகள், தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றன எனவும் இது, பயங்கரவாதத்திற்கு சமமான செயற்பாடுகள் எனவும் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவிக்கிறார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்க முடியாது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில், சர்வதேச சமூகத்தின் தலையீடுகள் அவசியமில்லையென்றும், பிரசாத் காரியவசம் சர்வதேச ஊடகங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களை புரியும் எவரும், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வருகை தரவில்லை. அடிப்படையற்ற போலி குற்றச்சாட்டுக்களுக்கு ஏமாற்றமடைந்தே, இவர்கள் இவ்வாறு செயற்படுவதாகவும், பிரசாத் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறயினும் இலங்கை ராணுவத்தினருக்கு எதிரான பிரேரணைகளுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுமென, அதற்கான தகுந்த பதிலளிக்கப்படுமெனவும் அவர் கூறுகின்றார்.
2 comments :
yes, he had right, ist a Kind of Terrorism
Histroy reveals terrorism brought to our country from India.However it reached an end in our country but some of the professionals terroist who boast themselves as politicians in our neighboring country making the people tom fools and continuing with the job as they are specialized
in violent thuggery terror activities and earn a big amount of money,in addition gang raping matters also included for physical entertainment. It is a big shame to your country.
Post a Comment