உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் சீனாவுக்கு 5-வது இடம்: 55 சதவீத ஆயுதம் பாகிஸ்தானுக்கு சப்ளை
உலக அளவில் 30 சதவீத ஆயுத ஏற்றுமதியுடன் அமெரிக்க முதல் இடம் வகிக்கிறது. 5 சதவீதம் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து சீனா ஐந்தாவது இடத்தில இருந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதன் ஆயுத ஏற்றுமதி கடந்த நான்கு வருடங்களில் 162 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து முதன் முறையாக தனது 5-வது இடத்தை இழந்துள்ளது.
சீனா விற்பனை செய்யும் ஆயுதங்களில் 55 சதவீதம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனா அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன ஆயுதங்களை வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் மியன்மார், வங்கதேசம், வெனிசுலா ஆகிய நாடுகளும் சீனாவின் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது.
பாகிஸ்தான் கடந்த 2010-ம் ஆண்டு, சீனாவுடன் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதில் அதிக ஒப்பந்தங்கள் பாதுகாப்பு தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சீனாவைத் தவிர அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுத இறக்குமதி செய்து வருகிறது.
சுவீடன் நாட்டின், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment