Tuesday, March 19, 2013

பிள்ளையானை விட்டு பிரதீப் மாஸ்டரும் வெளியேறினார்.

பிரதீப் மாஸ்ரர் எனப்படுகின்ற எட்வின் கிருஸ்ணானந்தராஜா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்களியக்கத்திலிருந்து 16.03.2013 ம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளதாக அவ்வியக்கத்தின் செயலாளர் பூ. பிரசாந்தன் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கைநெட் இக்கு கருத்துரைத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளரும்; பிரதீப் மாஸ்ரரின் சகோதரருமான சூட்டி எப்படுகின்ற கைலேஸ்வரராஜா „ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்தத்தின் ஸ்தாபர்களில் ஒருவரான பிரதீப் மாஸ்டர் அவ்வியக்கத்திலிருந்து சுயமாக வெளியேறி கடந்த 8 மாத காலமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தலைமையில் செயற்பட்டுவருவதாகவும்' கூறினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்ற அருண் தம்பிமுத்து கடந்த மூன்று மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைகொண்டு ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்குமான கட்சியின் கிளைகளை நிறுவி அதற்கான இணைப்பாளர்களையும் நியமித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அந்த வரிசையில் வவுனதீவு பிரதேச எல்லக்குட்பட்ட பிரதேசங்களுக்கான இணைப்பாளராக பிரதீப் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இதற்கான நியமனப்பத்திரம் எதிர்வரும் சில நாட்களில் வழங்கப்படும் என அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com