இங்கிலாந்தில் கணக்கு ஆசிரியர்- என்ஜினீயருக்கு பற்றாக்குறை
இங்கிலாந்தில் பணிபுரிய ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவர், கணக்கு ஆசிரியர், கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட 34 பணிகளுக்கு நிபுணர்களும், ஊழியர்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இங்கிலாந்து துணை பிரதமர் நிக்கிளக் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து 1 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்களில் காலியிடம் எற்பட்டுள்ளதாக இங்கிலாந்து குடி பெயர்ச்சி ஆலோசனை கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் கூடுதலாக இருந்தது. தற்போது தான் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது 2 அடுக்கு விசா வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டதால் தான் வெளிநாட்டினர் வருகை குறைந்து பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.
0 comments :
Post a Comment