கருணவின் படுகொலைகளுக்கான நினைவுச் சின்னத்தை திறந்த வைத்தார் மஹிந்தர்.
புலிகள் வடகிழக்கில் மேற்கொண்டிருந்த படுகொலைகளில் உலகின் கண்ணை திறக்கவைத்ததும், தமிழ் மக்களை சிங்களவர்கள் எதிரிகளாக பார்க்க வைத்ததுமான படுகொலையாக கருணா கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்தபோது அரந்தலாவையில் சங்கைக்குரிய ஹேகொட இந்தசார தேரர் உள்ளிட்ட பிக்குகுள் 31 பேரும் 3 பொது மக்களும் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டமை பேசப்படுகின்றது. குறித்த படுகொலையை சித்தரிக்கும் வண்ணம் பிரபல சிப்பி ஓருவரால் நினைவுச்சின்னம் ஒன்று அமைகப்பட்டுள்ளது. இச்சின்னத்தினை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.
இக்கொலையை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அரந்தலாவ நினைவு தூபியை ஜனாதிபதி நேற்று அங்குரார்ர்பணம் செய்து வைத்தார். 1987 ஜூன் 2 ஆம் திகதி அரந்தலா நுவரகலதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற இக்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் என்றுமே மறையாத ஒரு அதிர்ச்சி சம்பவமாக வரலாற்றில் பதிவாகியது.
பிக்குகள் கொலை செய்யப்பட்ட பஸ் வண்டியை பயன்படுத்தி, கொலை சம்பவம் இடம்பெற்றதை தத்ரூபமாக விளக்கும் வகையில் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த பஸ் வண்டியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
அரந்தலாவ நினைவு தூபி ஒரு இனத்திற்கு மட்டும் உரிய அடையாளமல்லவெனவும், சமாதானத்தை நேசிக்கும் உலக மக்கள் அனைவருக்கும் உரியதெனவும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். எதிராளியை நேசிக்கும் எதிர்கால சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு பாடுபடுவது அனைவரது பொறுப்பெனவும் அவர் தெரிவித்தார்.
எமக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன. 30 வருடங்களாக அபிவிருத்தி அடையாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்கு பிள்ளைகளின் கல்வியில் அக்கறைச் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நான் மக்களிடம் விடுக்கின்றேன். சிறந்த பிரஜையை உருவாக்குவதற்கு சிறந்த கல்வி அறிவுடைய மக்களை உருவாக்க வேண்டும். மாணவர்களை உரிய வேளையில் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை தோட்ட வேலைகளிலும் சொந்த வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டாம். பாடசாலைக்கு அனுப்புங்கள். மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நாங்கள் கடமைபட்டுள்ளோம். எதிர்காலத்தில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட கல்வியில் நாம் முழுமையான பிரஜையாக மாற வேண்டும்.
ஆகவே இதுவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ உரிய அடையாளமல்ல. இது இலங்கை மக்கள் மற்றும் உலகத்தில் சமாதானத்தை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் உரியவொரு அடையாளமாகும். அதுதான் எமது நோக்கமும் ஆகும்.
அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், தலைமையிலான மகா சங்கத்தினர் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்ன மற்றும் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபி;ட்டிய, ரி.பி.ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம , கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், உள்ளிட்ட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment