Sunday, March 24, 2013

முடிவடைந்த யுத்தம் தொடர்பில் மரண விசாரணை தேவையில்லை.. புலம்பெயர் தமிழர் தமிழ் மக்களுக்கு எதனை செய்தனர் கேட்கிறார் தயா மாஸ்டர்.

புலிகளமைப்பின் பிரச்சாரப் புயலாக இருந்தவர் தயா மாஸ்டர். தற்போது வடக்கை தளமாக கொண்டுள்ள டான் ரீவி யில் பணியாற்றுகின்றார். இவர் இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், புலம்பெயர் தமிழர் அமைப்பும், தமிழ்நாடு அரசியல் வாதிகளும், இலங்கை தமிழ்மக்களுக்காக எதனையும் புரியவில்லை என்றும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த யுத்தம் தொடர்பாக, மேலதிக மரண விசாரணை நடாத்துவதில் பயனில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசியல் வாதிகள், இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையே வீண் மோதல்களையும், முரண்பாடுகளையும் உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாகவும், தயா மாஸ்டர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கம் வடக்கில் வீடுகளை நிர்மாணித்து, ரயில் பாதைகளை புனரமைத்து, அபிவிருத்திப் பணிகளுக்கு பங்களிப்பு செய்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ் மக்களுக்காக எதனை புரிந்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு குரல் எழுப்பிய போதிலும், இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்காக, அவர்கள் எதனை சாதிக்கப்போகின்றார்கள் என்றும், அவர் வினவியுள்ளார். அவர்களிடம், எந்தவிதமான பயனுள்ள திட்டங்களும் இல்லையென்றும், அவர் குற்றம் சாட்டியுள்ள தயா மாஸ்ரர் தமிழ் மக்களின் பேரால், தொடர்ந்தும் நிதி சேகரிப்பதற்கே, இந்த புலம் பெயர் தமிழர்கள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டின் அரசியல் எதிர்காலத்தை இலங்கையர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சர்வதேச சமூகம் இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு மாத்திரம் பங்களிப்பு செய்யலாமென்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யபபட்டுள்ள தமிழ கைதிகள் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுவதாக, சர்வதேச சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தயா மாஸ்டர், தானும் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், தனக்கு அது போன்ற எதுவித இன்னல்களும் ஏற்படவில்லையென்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments :

Anonymous ,  March 24, 2013 at 8:59 PM  

தமிழ் அரசியலில் மிகவும் சுயநலம், சந்தர்ப்பவாதம், ஏமாற்று என்பது வெளிப்படையான உண்மை..பிரபாகரனோ, கருணாவோ, டக்கிலசோ அல்லது தமிழ் கூட்டணியோ, தமிழக அரசியல் வாதிகளோ, புலம்பெயர் தமிழர் அமைப்புகளோ எவரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே அவர்களுக்கு அடுத்தபடியாக எவரை எதிர் பார்க்க முடியும்?
அடுத்தபடியாக போர்குற்றம் என்பதில் புலிகளுக்கு நிகராக இராணுவம் புரிந்துள்ளது என்பதே உண்மை. உலகமும் நன்கு கற்று, அறிந்து கொண்ண்டு விட்டது. ஆனாலும், புலிகளை தண்டிக்க முடியாத படி புலிகளில் ஒருவரும் இல்லை என்ற துணிவில், இராணுவத்தை மட்டும் தண்டிக்கலாம் என்று சில சுயநலவாத கூட்டம் முயற்சிக்கலாம். ஆனால் இதே சுயலவாதிகள் அன்று புலிகள், அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பு அரணாக பாவித்து, பலிகொடுத்து, அதை உலகிற்கு காட்டி, தாங்கள் மட்டும் தப்பிக்க முயற்சி செய்ததை ஒருபோதும் கண்டுகொண்டதுமில்லை, கண்டித்ததுமில்லை.
மாறாக தமிழினத்தை நாசம் செய்த புலிகளை இன்றும் தலையில் வைத்து ஆட்டம் போட்டு வருகின்றது. இது எல்லாம் பூனை தன கண்களை மூடிக்கொண்டு களவாக பால் குடிப்பது போன்றதாகும். எனவே தயா மாஸ்டரின் கூற்றையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

Anonymous ,  March 25, 2013 at 2:40 AM  

Excellent points! keep it up.

"புலம்பெயர் தமிழர் அமைப்பும், தமிழ்நாடு அரசியல் வாதிகளும், இலங்கை தமிழ்மக்களுக்காக எதனையும் புரியவில்லை"

"அன்று புலிகள், அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பு அரணாக பாவித்து, பலிகொடுத்து, அதை காட்டி, தாங்கள் மட்டும் தப்பிக்க முயற்சி செய்ததை ஒருபோதும் கண்டுகொண்டதுமில்லை, கண்டித்ததுமில்லை"

"மாறாக தமிழினத்தை நாசம் செய்த புலிகளை இன்றும் தலையில் வைத்து ஆட்டம் போட்டு வருகின்றது. இது பூனை தன கண்களை மூடிக்கொண்டு களவாக பால் குடிப்பது போன்றதாகும்"

Anonymous ,  March 25, 2013 at 10:53 AM  

Aha, ithu than pulikal, Thaya master,Karuna, Pirabah, all r same. and now puli vals overseas

karan ,  March 25, 2013 at 1:22 PM  

புலி என்றால் எப்படி என்று பலர் பல தடவை சொன்னபோதும் மர மண்டைகள் நம்ப தயாரக இருக்கவில்லை. புலி என்றால் இப்படித்தான் வயிறு வழர்பதற்கு எதுவும் சொல்லும். ஆதற்காக இவர் சொல்வது பொய் என்று புலன் பெயர் தமிழர் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் இவர் இப்ப சொல்வது பொய் என்றால். நிதர்சனம்.கொம், புதினம்.கொம், சங்கதி.கொம், தமிழ்நாதம்.கொம் தமிழ்வின்.கொம் என புலி ஊதுகுழல்கள் சொன்னவை யாவும் பொய் என்று அர்த்தப்படும.; காரணம் அன்று இவர்தான் இத்தனை ஊடகங்களுக்கும் தேசியத்தலைவர். இவர் சொன்னதைத்தான் நான் எழுதினேன் என ஊத்தை சேது இப்பவும் சொல்கின்றார்.

இவர் சொல்லியிருக்கின்றார் நாங்கள் தமிழ் மக்களை கொல்வோம் பின்னர் அவற்றை வீடியோக்கள் படங்கள் எடுத்து புலம்பெயர் இணையங்களில் போட்டு சிங்களம்செய்து விட்டது என பிரச்சாரம் செய்வோம் என்றும். இதற்கு மேல் போர்க்குற்ற சாட்சி எதற்கு.
எனவேதான் நடந்ததை பற்றி விசாரிக்க தேவையில்லை என்கின்றார் தயா மாஸ்டர்.
துயா மாஸ்டர் ஒன்றும் அரசாங்கத்திற்காக இதை சொல்லவில்லை போர்க்குற்ற விசாரணை என்று வந்தால் அது தங்களுக்குத்தான் (புலிகளுக்கு) என்பதால்;தான் பெரியவர் இப்படி சொல்கின்றார்.

Unknown March 29, 2013 at 4:19 AM  

Paramasivan kaluthilulla paambu ketichiaam Garuda sawkiyama.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com