சாரதியாக ஆசைப்படும் யாழ்ப்பாணத்தார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 60 ஆயிரத்தி 732 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 டிசம்பர் வரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விண்ணப்பங்களின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் 38 ஆயிரத்து 252 பேருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு 5255 விண்ணப்பங்களும், 2010 ஆம் ஆண்டு 14440 விண்ணப்பங்களும்,2011 ஆம் ஆண்டு 19575 விண்ணப்பங்களும், 2002 ஆம் டிசம்பர் வரை 21462 விண்ணப்பங்களும் கிடைக் கப்பெற்றுள்ளன. இதில் 2009 ஆம் ஆண்டு 3362 பேருக்கும், 2010 ஆம் ஆண்டு 5646 பேருக்கும், 2011 ஆம் ஆண்டு 11931 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு 17313 பேருக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் குறித்த காப்பகுதியில் யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக 6082 மோட்டார் சைக்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment