Sunday, March 3, 2013

விக்கிரமபாகு தொப்பி போட்டு, சுன்னத் எடுத்து, ஹலாலாகியதற்கு நாம் என்ன செய்யமுடியும்?

விக்கிரமபாகு பிரபாகரனின் மறுகுரல் என்பது நாடறிந்த விடயம் எனக் குமுறுகின்றது ஹெல உறுமய

அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்பாக விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக்க ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘விக்கிரமபாகு கருணாரத்ன முஸ்லிம்களின் தொப்பியைப் போட்டுக் கொண்டு, சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொண்டு, ஹலாலாக மாறியதற்கு எங்கள் கட்சிக்கு எந்தப் பிரச்சினையு கிடையவே கிடையாது’ குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பிக்க ரணவக்க, இந்நாட்டு சிங்கள பௌத்தர்களின் தலைவர் என்பதும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக எழுந்து நிற்பவர் என்பதும் முழு நாடும் அறிந்த விடயம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் பிரசாரச் செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவின் கையொப்பத்துடன் கூடிய அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘கடந்த நாட்களில் ஒருநாள் விக்கிரமபாகு கருணாரத்னவினால் அமைச்சர் பாட்டலீ ஷம்பிக்க ரணவக்கவின் பெயருக்குப் பின்னால் மொஹமட் எனும் ஒரு சிறுபகுதி இணைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராகக் கூக்குரல் இடுகின்ற ஈருருளிக் கட்சியின் தலைவரான சரியான அமைப்பொன்று அறியாத பாகுவின் இவ்வாறான விநோதமான பேச்சு பற்றி நாடு நன்கு அறியும்.

விக்கிரமபாகுவிற்கு நாங்கள் ஒரு விடயம் பற்றிச் சொல்ல விரும்புகிறோம். அதுதான், நீங்கள் நினைவுறுத்த வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. நாட்டு மக்களின் காசைச் சுரண்டி உண்டுகொண்டு நாட்டுக்கு எதிராகச் செயற்படும் நபர் யார் என்று வரலாற்றில் பதிவாகிவிட்டதைத் தெரிந்துகொள்ளுங்கள்.... வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதங்களையும் தொட்டுச் சுவைத்த ஓணாய்களுக்கு மத்தியில் சம்பிக்க ரணவக்க ஒரு சிங்கம். விக்கிரமபாகு யார் என்றும் பாட்டலீ சம்பிக்க ரணவக்க யார் என்பது பற்றி இந்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

அதுபற்றி நாங்கள் புதிதாக ஏதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கடைசியாக ஒன்றைச் சொல்கிறோம். அதுதான் விக்கிரமபாகு கருணாரத்ன வேலுப்பிள்ளை பிரபாகரனின் குரலாக நாட்டில் ஒலித்துக் கொண்டிருப்பது நாடே அறிந்த உண்மையாகும்.’

(கேஎப்)

3 comments :

Anonymous ,  March 3, 2013 at 11:44 AM  

Do not make race ..........

Anonymous ,  March 4, 2013 at 12:51 PM  

விக்கிரமபாகு மாத்தையா,
நீங்கள் பிரபாகரனின் பாதங்களையும் தொட்டு வணங்கி அவரைவரை கடவுளாக ஏற்று கொண்டவர். இப்போ தொப்பியைப் போட்டு சுன்னத் செய்வது நியாயம் இல்லை.

Anonymous ,  March 4, 2013 at 3:07 PM  

There are many Genuine politicians
and good people in Sri Lanka, but have no chance these days.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com