அமெரிக்கா பிள்ளையையும் நுள்ளி தொட்டிலும் ஆட்டும் கதை தெரியுமோ? படம்பாருங்கள்.
இலங்கை இராணுவம் இறுதிப்போரில் உரிமை மீறல்களை செய்துள்ளதாகவும் அதற்கு எதிராக ஐ.நா வின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா பிரேரணை சமர்ப்பித்து இலங்கையை போர்க்குற்றவாளியாக்க போகின்றது என்பது இன்று யாவரதும் எதிர்பார்ப்பு. அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. உண்மையில் அமெரிக்கா இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றை கொண்டுதான் வருகின்றது. ஆனால் அந்த பிரேரணையில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளாமல் கற்பனையில் கதைகள் சொல்லப்படுவது வேறு கதை.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கின்ற தரப்பினருக்கு தெரியாத ஒரு செய்தி இங்கே படங்கள் ஊடாக நிருபிக்கப்படுகின்றது. அதாவது இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்க இராணுவம் வழங்கும் இராணுவப் பயிற்சிகள் இன்றும் தொடர்ந் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் படை அதிகாரிகள் குழுவொன்று சென்ற மாத நடுப்பகுதியில், வவுனியா பிரதேசத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகளை அளித்துள்ளது.
பூ ஓயாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு முகாமில் இந்த கூட்டுப்பயிற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 18ம் நாள் தொடக்கம் 22ம் நாள் வரை இடம்பெற்ற இந்தப் பயிற்சியில், சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல், மருத்துவப்படைப் பிரிவு மற்றும் ஆயுத தளபாட தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் 18வது மருத்துவப் படைத்தலைமையகம், பசுபிக் விமானப்படை, பசுபிக் பிராந்திய பொதுசுகாதார தலைமையகத்தின் மிருக மருத்துவ நிபுணர்கள், 8வது அரங்க உதவித் தலைமையகத்தின் வெடிபொருள் நிபுணர்கள் சிறிலங்கா படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.
இது தவிர இலங்கை இராணுவத்திற்கு இன்றும் ஆ யுத தளபாடங்களை வழங்கி கொண்டிருக்கும் அமெரிக்கா யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கை இராணுத்தின் ஆ யுத குறைப்பாடுகளை நிவர்த்தி செய்தது என்பதை மக்கள் மனதில் நிறுத்தினால் இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமுள்ள உறவு பற்றி தெரிந்து கொள்ளலாம். அத்துடன் இன்று கொண்டு வரப்படுகின்ற பிரேரணைகள் யுத்த மீறல்கள் பற்றியவை அல்ல என்பதையும் இலங்கையில் தான் பதித்துள்ள காலை நிரந்தரமாக வைத்துக்கொள்வதற்கானது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
1 comments :
புலன் பெயர் தமிழர்கள் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி இது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Wq7D_Cxe9co
Post a Comment