‘வாள் தடி சேனா’ புத்த பெருமானையும் விட உயர்ந்துவிட்டதோ? - வினவுகிறார் பத்தேகம சமித தேரர்
புத்த பெருமான் குரோதத்தின் மூலம் குரோதத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என போதித்திருந்தும், சில இயக்கங்கள் (சேனாக்கள்) வாள், தடி போன்றவற்றைத் தூக்கிக் கொண்டு போருக்கு ஆயத்தமாகியுள்ளன என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் குறிப்பிடுகிறார். சகல செயற்பாடுகளுக்கும் மாற்றுச் செயற்பாடுகள் உள்ளனவென்றும், இவ்வாறான கொடிய செயற்பாடுகளால் எண்ணவியலாத பெரும் பிரச்சினை தோன்றலாம் எனவும் அவர் தெளிவுறுத்துகிறார்.
பௌத்த சமயத்திற்காக எழுந்து நிற்கிறோம் எனக் கூக்குரலிடும் சில இயக்கங்கள் புத்த பெருமானை விடவும் பெரியவர்களாக மாறி - அவரது செயற்பாடுகளையும் விஞ்சி இவ்வாறான தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் பௌத்த தார்மீகத்தைக் கட்டிக் காக்கும் எண்ணக்கரு அவர்களிடம் காணப்படுவதில்லை எனவும் இதனால் கடைசியில் மதவாத அல்லது இனவாத பெரும் பிளவு ஏற்பட்டு அரசாங்கமும் கவலைப்பட வேண்டிவரும் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறான பௌத்த இயக்கங்களிடையே பல உட்பூசல்கள் இருப்பதென்பதை வெளிக்காட்டிய சமித்த தேரர் மேலும் இந்த கைகலப்புக்களின் இறுதியில் புண்படப்படப் போவது அரசாங்கமே! பின்னர் அரசாங்கம் எவ்வாறு அந்த வலியைப் பொறுத்துக்கொள்ளும் என்பது தனக்கும் பிரச்சினையே என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment