மின்சாரப் பட்டியலை 50% அதிகரிப்பதன் மூலம் ‘மகிந்த சிந்தனையில் ஒளிரும் நாடு’ இருள்நாடாக மாறுகிறது!
ஐதேக செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க
மகிந்த சிந்தனையின் மூலம் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கி ஒளிரும் நாடாக மாற்றுவதாகக் கூறி, மின்சாரப் பட்டியலை 50% வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் ஒளிரும் நாடு எவ்வாறிருந்தபோதும்
இருண்ட நாடொன்று உருவாகும் என்பதே உண்மை என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்த நாயக்க குறிப்பிட்டார்.
மின்சார சபைக்கு நட்டம் ஏற்படுவதாகக் கூறி மின்சாரப் பட்டியலின் தொகையை அதிகரிக்க முயன்ற போதும், மின்சார சபை நட்டமடைவதற்குக் காரணம் பாவனையாளர்களின் அசமந்த போக்கோ, அவர்களின் தவறோ அல்ல. மாறாக மின்சார சபை நட்டமடைவது கெரவலப்பிட்டிய மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து அனைத்து மின்சாரப் பிரிவுகளிலும் நடக்கின்ற களவு, பொய், ஏமாற்று முதலியவற்றினாலேயே எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
ஆயினும் அவ்வாறான ஏமாற்றுக்களுக்கும், வஞ்சனைகளுக்கும் இன்று ஆளாகிவேண்டியிருப்பது இந்நாட்டு அப்பாவிப் பொதுமக்களே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment